VIDEO: நான் பார்த்த பெண்ணை... நீ பார்க்கவில்லை... பிரபு தேவா - வடிவேலுவின் காதலர் தின வாழ்த்து!

நடிகர்கள் பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில்`BANG BANG என்ற படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை சாம் ரோட்ரிகஸ் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

காதலன், மனதை திருடிவிட்டாய், ராசைய்யா, மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ் மற்றும் எங்கள் அண்ணா போன்ற படங்களின் மூலம் 90ஸ்களில் ரசிகர்களை மகிழ்வித்த இந்த காமெடி கெமிஸ்ட்ரி கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு பிரபு தேவா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரபு தேவா மற்றும் வடிவேலு ஆகியோர் "நான் பார்த்த பெண்ணை.. நீ பார்க்கவில்லை.." என்று பாடல் பாடி வைப் செய்துள்ளனர். 

Happy Valentines Day pic.twitter.com/Cq7MbwGmoU

— Prabhudheva (@PDdancing) February 14, 2026

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.