கேரளாவில் வந்த சிக்கல்!.. சூர்யா 47 ஷூட்டிங்கை சென்னைக்கு மாற்றிய படக்குழு!..
ரெட்ரோ படத்திற்கு பின் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்கிற திரைப்படத்தில் நடித்தார் சூர்யா. ஆனால் பல காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.. ஒரு வழியாக தற்போது படத்தை முடித்து விட்டாலும் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க முடியவில்லை.
ஏனெனில் கருப்பு பணத்தின் ஓடிடி உரிமை பல மாதங்களாக விற்கப்படாமல் இருந்தது. இப்போது ஒரு வழியாக அப்படத்தின் ஒடிடி மற்றும் தொலைக்காட்சி ரிமையை Zee5 நிறுவனம் 45 கோடிக்கு வாங்கியிருக்கிறது. கருப்பு படத்திற்கு பின் சூர்யா லக்கி பாஸ்கர் படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார்..
அந்தப் படத்தை முடித்துவிட்டு மலையாள பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. பல வருடங்களுக்கு பின் இந்த படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்படிப்பு கேரளாவில் நடக்கவிருந்தது. ஆனால் ஷூட்டிங் எடுக்க வேண்டிய இடத்தில் அனுமதி கிடைக்காததால் தற்போது படப்பிடிப்பை சென்னைக்கு மாற்றியிருக்கிறார்கள்..
அதுவும் சென்னை கிழக்கு கடறகரைசாலையில் லைவ் லொகேஷனில் கேமராக்களை மறைத்து வைத்து சூர்யாவை சாலைகளில் நடமாட விட்டு ஷூட் செய்து வருகிறார்களாம். எனவே சென்னை கிழக்கு கடற்கரை சாலை பக்கம் சென்றால் திடீரென சூர்யாவை பார்த்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்கிறார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


