10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் வைபவ் சூர்யவன்ஷி.. சலுகைகள் உண்டா?

 

2026-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையில், இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து இந்திய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தவர் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. கிரிக்கெட் உலகின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ள 14 வயதே ஆன இந்த இடதுகை ஆட்டக்காரர், தற்போது தனது 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத தயாராகி வருகிறார்.

 

பீகாரின் சமஸ்திபூரில் உள்ள போடார் இன்டர்நேஷனல் பள்ளியில் பிப்ரவரி 17 முதல் நடைபெறவுள்ள இந்த தேர்வில் அவர் பங்கேற்கிறார். "இது கல்விக்கான ஆடுகளம், இங்கு அவருக்கு தனிச் சலுகைகள் எதுவும் கிடையாது; மற்ற மாணவர்களை போலவே அவரும் நடத்தப்படுவார்" எனப் பள்ளி முதல்வர் நீல் கிஷோர் தெரிவித்துள்ளார். 

 

உலகக் கோப்பையில் 30 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்தது, ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் சதம் அடித்தது எனப் பல சாதனைகளை சுமந்து வந்தாலும், தற்போது ஒரு சாதாரண மாணவனாக தனது கல்வி பயணத்தை தொடர்வது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.