ஜடேஜாவை வாங்கியும் நோ யூஸ்.. கேப்டன் பதவி இல்லை.. ரசிகர்கள் ஏமாற்றம்..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த ரவீந்திர ஜடேஜா, சமீபத்திய மெகா ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார். அனுபவம் வாய்ந்த ஜடேஜாவே அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், இளம் வீரர் ரியான் பராக் ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டனாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு மாறியதை தொடர்ந்து, ஜடேஜா மற்றும் சாம் கரன் அந்த அணிக்கு சென்றனர்.
அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ரியான் பராக் 2019 முதல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். சீனியர் வீரரான ஜடேஜாவுக்கு கேப்டன் வாய்ப்பு மறுக்கப்பட்டு, இளம் வீரருக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டது ஜடேஜாவின் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜடேஜா போன்ற ஒரு மூத்த ஜாம்பவான் அணியில் இருக்கும்போது, ரியான் பராக்கிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது. புதிய கேப்டனின் கீழ் ராஜஸ்தான் அணி எவ்வாறு செயல்படப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


