T20 WC: இந்திய அணிக்கு மட்டும் வாய்ப்பு, எங்களுக்கு?- அதிருப்தியை வெளிப்படுத்திய நமீபியா கேப்டன்

டி20 உலககோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, நமீபியா அணிக்கு இரவுநேரப் பயிற்சி வழங்கப்படாதது குறித்து அதன் கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

10வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று (பிப்.12) நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவை, நமீபியா எதிர்கொள்கிறது.

India vs Namibia

இந்நிலையில் போட்டிக்கு முன்னதாக நமீபியா அணியின் கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் பேட்டி அளித்திருக்கிறார்.

அதில் பேசியிருக்கும் அவர், "நமீபியாவில் எங்களிடம் மின்னொளி வசதிகள் (floodlights) எதுவுமில்லை.

கட்டமைப்பு ரீதியாக, இது எங்களுக்கு ஒரு பெரிய சவாலாகும். நேபாள பிரீமியர் லீக், ILT20 மற்றும் உலகக் கோப்பையில் விளையாடிய வீரர்களைத் தவிர, மற்றவர்களுக்கு மின்னொளியில் விளையாடிப் பழக்கமில்லை.

இந்தப் போட்டிக்கு முன்னதாக எங்களுக்கு இரவு நேரப் பயிற்சி வழங்கப்படவில்லை. அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.

இந்தியாவிற்கு இரண்டு இரவு நேரப் பயிற்சி செஷன்கள் வழங்கப்பட்டுள்ளன என்று நினைக்கிறேன்.

Namibia
Namibia

இப்போது கனடா அணி இரவு நேரப் பயிற்சியில் ஈடுபடப் போவதைப் பார்க்கிறேன்.

இதிலிருந்து நீங்கள் எதை வேண்டுமானாலும் புரிந்துகொள்ளுங்கள். ஆனால், நாங்கள் களமிறங்கி எங்களது நமீபிய பாணியில் போராடுவோம்" என்று தனது அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.