சண்டையில உடையறது நம்மோட மண்ட... பூக்கி படத்தின் டிரெய்லர் வெளியானது
விஜய் ஆண்டனி தற்போது ‛பூக்கி என்ற படத்தை தயாரித்துள்ளார். இதில் விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா ‛பூக்கி படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியும் இதில் நடித்துள்ளார்.
2K தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்சனைகளை மையமாக வைத்து கலக்கலான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையில், இப்படம் உருவாகி உள்ளது. விஜய் ஆண்டனி இசையமைத்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இதனிடையே, பூக்கி படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஜீ தமிழ் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஜீ5 நிறுவனம் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், பூக்கி படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகிறது. 2.21 நிமிடங்கள் டிரெய்லர் வீடியோ நடிகர் சிம்புவின் குரலுடன் தொடங்குகிறது. வீடியோவில் ஒரு ஜோடி காதலில் விழுந்து, பின்பு அவர்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்து அதன்பின் நடக்கும் சம்பவங்களை பொழுது போக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
The trailer of #POOKIE is here ?
— vijayantony (@vijayantony) February 11, 2026
Just enough to make you think youve understood everything. You havent ?
2 days to go | In cinemas worldwide from FEB 13 ? #PookieTheMovie #AjayDhishan #RKDhanusha #VijayAntony pic.twitter.com/E8jsC7x3x1
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


