Jananayagan: தேர்தலுக்கு அப்புறம்தான் ஜனநாயகன் ரிலீஸா?!.. விஜய் ஃபேன்ஸ் ஷாக்!.

ஜனநாயகன் திரைப்படம் சென்சாரில் சிக்கியதல் கடந்த 9ஆம் தேதி வெளியாகாமல் போனது. தயாரிப்பாளர் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என வழக்கு தொடர்ந்து அதன்பின் வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு வந்தது. தற்போது வழக்கை வாபஸ் பெற்றிருக்கிறார் தயாரிப்பாளர்.
மேலும் மறு தணிக்கைக்கும் அப்ளை செய்திருக்கிறார்கள்.

எனவே வருகிற 19 அல்லது 20 தேதிகளில் ஜனநாயகன் வெளியாகும் என வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் எதிர்பார்க்கிறார்கள். தயாரிப்பாளரும் அதை நம்பிக்கொண்டிருக்கிறார். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்கிறார்கள் விபரம் இருந்தவர்கள்..

ஏனெனில் கண்டிப்பாக மறு தணிக்கைக்கு இன்னும் சில நாட்கள் அவகாசம் எடுப்பார்கள். மார்ச் 27ஆம் தேதி இந்த படம் வர வேண்டும். இல்லையென்றால் என்றால் தேர்தலுக்கு பிறகே வெளியாக வாய்ப்பு அதிகம். ஏனெனில் மார்ச் மாதம் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடக்கும். ஏப்ரலில் சட்டசபை தேர்தல் வரும். அப்போது படத்தை வெளியிட்டால் கல்லா கட்டமுடியாது. எனவே கோடை விடுமுறையில் படத்தை வெளியிடுவதுதான் நல்லது என சமீபத்தில் சில வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளரை சந்தித்து சொல்லியிருக்கிறார்கள்.

எனவே நடப்பதை எல்லாம் பார்க்கும்போது ஜனநாயகன் திரைப்படம் இந்த மாதத்திற்குள் வெளியாகவில்லை என்றால் கண்டிப்பாக தேர்தலுக்கு பின்னரே வெளியாகும் என கணிக்கப்படுகிறது..

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.