Jananayagan: எலக்‌ஷனுக்கு அப்புறம் ரிலீஸான வேஸ்ட்!.. விஜய்க்கு ஒரு யூஸும் இல்ல!…

நடிகர் விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் ஜனநாயகன் அவரின் கடைசி படமாக பார்க்கப்படுகிறது. மலேசியாவில் நடந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியிலும் விஜய் இதை உறுதி செய்தார். மேலும் அரசியலில் குறுகிய காலத்தில் மட்டும் ஈடுபட மாட்டேன்.. நீண்ட நாள் நிலைத்திருப்பேன் எனவும் ஒரு பேட்டியில் கூறினார். எனவே விஜய் இனிமேல் சினிமா நடிக்க வாய்ப்பில்லை என்பது தெரிகிறது. எனவே ஜனநாயகனை காண விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்..

ஜனநாயகன் திரைப்படத்தில் அரசியல் தொடர்பான நிறைய காட்சிகள் இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கு அறிவுரை சொல்வது போலவும், அரசியல்வாதிகளை விஜய் சாட்டையால் வெளுப்பது போலவும் காட்சிகள் வருகிறது. எனவே இந்த படம் வருகிற தேர்தலுக்கு தனக்கு மைலேஜ் கொடுக்கும் என விஜய் கருதுகிறார். ஆனால் படம் சென்சாரில் சிக்கியதால் ஒரு மாத காலம் தாமதமாகிவிட்டது.

தற்போது படம் மறுத்தணிக்கையில் இருக்கிறது. அநேகமாக விரைவில் அதிகாரிகள் படத்தை பார்த்து சான்றிதழை கொடுத்துவிட்டால் வருகிற 19 அல்லது 20ம் தேதி, இல்லையெனில் அதற்கு அடுத்த வாரம் 27ம் தேதி இந்த படம் வெளியாக வேண்டும். அப்படி இல்லையென்றால் தேர்தலுக்கு பின்னரே படம் வெளியாகும் என்கிறார்கள்..

ஏனெனில் மார்ச் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு வந்துவிடும்.. ஏப்ரல் மாதத்தில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறும். எனவே இந்த இரண்டு மாதத்திலும் படத்தை வெளியிட்டால் படம் வசூலை பெறாது. எனவே, கோடைவிடுமுறையான மே மாதத்தில் மட்டுமே வெளியிட முடியும். அப்போது வெளியிட்டால் படம் நல்ல வசூலை பெற்றாலும் அரசியல்ரீதியாக விஜய்க்கு எந்த பலனும் இருக்காது.

எனவே தேர்தலுக்கு முன்பு ஜனநாயகன் படம் வெளியானால் மட்டுமே விஜய்க்கு அது பலனாக அமையும். அது நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.