டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறை... சூப்பர் ஓவரில் சாதனை படைத்த SAvAFG போட்டி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 13ஆவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை குவித்தது.

கடின இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 187 ரன்களை எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து சூப்பர் ஓவரில் மீண்டும் இரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சூப்பர் ஓவர் போட்டியாக இது மாறியது.

சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 17 ரன்களை அடித்தது. இதைத் துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி 1 விக்கெட் இழப்புக்கு 17 ரன்களை சேர்த்தது. இதனால் போட்டி மீண்டும் சமனில் முடிய 2வது சூப்பர் ஓவருக்கு சென்றது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 2 முறை சூப்பர் ஓவர்கள் வீசப்பட்ட போட்டியாக இது மாறியது.

2வது சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 23 ரன்களை விளாசியது. இதைத் துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 19 ரன்களை எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.