டி20 உலகக் கோப்பை போட்டியில் அபிஷேக் சர்மா பங்கேற்பது சந்தேகம்? என்ன நடந்தது?

 

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மா, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 

டி20 உலகக் கோப்பைத் தொடரில், இந்திய அணி நாளை நமீபியா அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், நாளைய போட்டியில் அபிஷேக் சர்மா பங்கேற்பது தற்போதைய நிலையில் சந்தேகமாகவே உள்ளது.

 

அவருக்கு பதிலாக, அதிரடி வீரர் சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், இந்திய அணி நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது. 

 

அபிஷேக் சர்மா விரைவில் குணமடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். 

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.