டி20 உலகக் கோப்பை: 15 ஓவரிலேயே யுஏஇ அணியை முடித்து விட்ட நியூசிலாந்து

சென்னை:

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - யுஏஇ(ஐக்கிய அரபு அமீரகம்) அணிகள் விளையாடியது.

இதில் டாஸ் வென்ற யுஏஇ அணியின் கேப்டன் முகமது வசீம் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக சைஃபர்ட் மற்றும் ஆலன் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் யுஏஇ அணியின் பந்து வீச்சை சுலபமாக எதிர் கொண்டர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

இறுதியில் நியூசிலாந்து அணி 15.2 ஓவரில் 175 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சைஃபர்ட் 89 ரன்களிலும் ஆலன் 84 ரன்களிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.