எல்லாம் முடிஞ்சும் கருப்புக்கு ஏழரை முடியலயே!.. மீண்டும் ரிலீஸ் தள்ளிப்போகுமா?…

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியிருக்கும் திரைப்படம்தான் கருப்பு. இந்த படத்தை சூர்யாவின் உறவினர் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். இந்த படம் உருவானபோது பல பிரச்சனைகளை சந்தித்தது. ஆர்.ஜே.பாலாஜிக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே சில பிரச்சனை வந்தது. அதன்பின் ஆர்.ஜே.பாலாஜிக்கும் திரிஷாவுக்கும் இடையே பிரச்சனை வந்தது.

பல நாட்கள் ஷூட்டிங் நடக்கவில்லை. இன்னும் 20 நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருந்தபோது கோபமடைந்த சூர்யா லக்கி பாஸ்கர் படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப்போய்விட்டார். அந்த படம் முடிந்து அடுத்து மலையாள பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப்போய்விட்டார் சூர்யா.

ஒருபக்கம் இந்த படத்தின் ஓடிடி உரிமை விற்கப்படாமல் இருந்தது. அதற்கு காரணம் இந்த படத்திற்கு 85 கோடி விலை சொன்னார் எஸ்.ஆர்.பிரபு. ஆனால் ஓடிடி நிறுவனங்கள் இந்த விலையை கொடுக்க முன்வரவில்லை. அதன்பின் ஒருவழியாக மீதி 20 நாட்கள் படப்பிடிப்பை முடித்து தற்போது படம் தயாராகிவிட்டது..

தற்போது இந்த படத்தின் ஓடிடி உரிமையை Zee5 வாங்கியிருக்கிறது. 85 கோடி சொல்லி, 60 கோடிக்கு வந்து தற்போது படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி என இரண்டு உரிமைகளையும் சேர்த்து 45 கோடிக்கு விற்பனை செய்திருக்கிறார்கள்..

அதோடு படத்தை ஏப்ரல் 10ம் தேதி வெளியிடவும் முடிவு செய்து விட்டார்கள். ஆனால் தற்போது இதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அனேகமாக ஏப்ரல் முதல் பாதியில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க வாய்ப்பிருக்கிறது. குறிப்பாகஏப்ரல் 13-ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடக்கும் என சொல்கிறார்கள். எனவே தமிழ்நாடு தேர்தல் விஷயத்தில் பிஸியாக இருக்கும் போது படம் பார்க்க மக்கள் வர மாட்டார்கள் என்பதால் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. அனேகமாக தேர்தலுக்கு பின்னரே கருப்பு படம் வெளியாகும் எனத் தெரிகிறது..

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.