தெய்வத்திருமகள் குட்டி பாப்பாவா இது?!.. அடுத்த ஹீரோயின் ரெடி!.. வைரல் போட்டோஸ்..
மும்பையை சேர்ந்தவர் சாரா அர்ஜுன். இவரின் அப்பா ராஜ் அர்ஜுன் பாலிவுட்டில் பிரபலமான நடிகர். சிறு வயது முதலே விளம்பர படங்களில் நடிக்க தொடங்கினார் சாரா. 100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்திருக்கிறார்.

விளம்பர படங்கள் மூலம் பிரபலமானதால் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு இவரை தேடி வந்தது. அப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் என்ற பழமொழி படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்..

ஏ.எல் விஜய் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக நடித்து அசத்திருந்தார். இந்த படத்தில் அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அதேபோல் மீண்டும் ஏ.எல் விஜய் இயக்கிய சேவல் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்…

தற்போது சாராவுக்கு 20 வயதாகி விட்டதால் கதாநாயகியாக நடிக்க தொடங்கியிருக்கிறார். பாலிவுட்டில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். ஒருபக்கம் சினிமா வாய்ப்புகளை பெறுவதற்காக விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களையும் சமூகவலைதளத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்..

அந்த வகையில் சாராவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. இதைப்பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள் ‘தெய்வத்திருமகள் படத்தில் வந்த குட்டி பாப்பாவா இது?’ என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்..
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


