Fever ஓரமா இருக்கட்டும்... காய்ச்சலுடன் கோப்பையை வென்ற ஸ்மிருதி மந்தனா

வதோதரா:

மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி வதோதராவில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 87 ரன்கள் எடுத்து ஆட்டநாயகி விருதை வென்றார். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்ததற்கான ஆரஞ்சு தொப்பி ஸ்மிருதி மந்தனாவிற்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு முந்தைய இரவு, ஸ்மிருதிக்கு 103 டிகிரி ஃபாரன்ஹீட் காய்ச்சல் இருந்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பயிற்சியாளர் மாலோலன் ரங்கராஜன் தெரிவித்தார்.

Thank you Captain Smriti Mandhana Smriti was down with 103° fever night before finals, still she came to bat and rest is history pic.twitter.com/onxg2kREvx

— iamFlickX18 (@iamflicksX18) February 6, 2026

கடுமையான காய்ச்சல் மற்றும் "ஃப்ளூ" (flu) பாதிப்பு இருந்தபோதிலும், அணியின் வெற்றிக்காக அவர் ஓய்வெடுக்காமல் விளையாடத் தீர்மானித்தார்.

உடல்நலக் குறைவையும் மீறி களமிறங்கிய அவர், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 41 பந்துகளில் 87 ரன்கள் குவித்து தனது அணியை சாம்பியன் பட்டத்தை நோக்கி அழைத்துச் சென்றார்.

இவரது இந்த அசாத்தியமான பங்களிப்பிற்காக இறுதிப்போட்டியின் "ஆட்ட நாயகி" (Player of the Match) விருது வழங்கப்பட்டது. அவருக்கு ரசிகர்கள் உள்பட விளையாட்டு வீரர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.