T.Rajendran: டி.ஆருக்கு பிடிச்ச ஒரே நடிகை இவங்கதானா? மேடையில் கண்கலங்கிய டிஆர்

பிப்ரவரி 13 ஆம் தேதி டிஆர் இயக்கிய உயிருள்ளவரை உஷா படம் ரீ ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தின் மூலம் தான் நளினி முதன் முதலில் தமிழில் அறிமுகமானார். இந்தப் படத்தின் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் கலந்து கொண்டனர். அப்போது நளினி மேடையில் சில விஷயங்களை பகிர்ந்தார். இதோ அவர் கூறியது:

இந்தப் படம் பண்ண வேண்டும் என்றால் அது நளினி மட்டும் தான் பண்ணனும்னு சொல்லி இன்று நான் உங்கள் முன்னாடி நிற்கிறேன் என்றால் எல்லாத்துக்கும் ஒரே காரணம் என்னுடைய சாமி டி ஆர் சார் மட்டும்தான். எங்க டைரக்டருக்கு எதுக்கு என்னை பிடிக்கும் என்றால் நான் எந்த தொந்தரவும் செய்ய மாட்டேன். என்னுடைய டைரக்டர் என்ன சொன்னாலும் நான் செய்வேன்.

மேலே இருந்து கீழே விழ சொன்னால் கூட எதுக்கு விழனும் என்று கேட்க மாட்டேன். உடனே விழுந்து விடுவேன். அவர் எவ்வளவு டயலாக் சொன்னாலும் அவர் வாயை பார்த்துக் கொண்டே இருப்பேன். அதே மாதிரி பேசுவேன். 24 மணி நேரம் அவர் என்னை நடிக்க சொன்னாலும் நடிப்பேன். அவருக்கு பேக்கப் சொல்றதே பிடிக்காது. சூரியன் வந்தாலும் வரவில்லை என்றாலும் நடிச்சுக்கிட்டே இருக்க சொன்னாலும் நடித்துக் கொண்டே இருப்பேன்.

அதனால் அவருக்கு நளினியை தவிர வேற எந்த ஒரு நடிகையையும் பிடிக்காது என நான் மனதார சொல்வேன். ஏனெனில் அவருடைய அடுத்த படமான தங்கைக்கு ஓர் கீதம் படமாகட்டும் உறவை காத்த கிளி படமாகட்டும் இரண்டிலும் நான் தான் நடித்தேன். அதன் பிறகு கால்சீட்டு காரணமாக அவருடைய படங்களில் என்னால் நடிக்க முடியவில்லை. எவ்வளவோ நல்ல விஷயங்கள் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் அவரை (ராமராஜன்) விட்டு நான் வந்த பிறகு என்னை அழைத்து என்னை பார்த்ததும் ஒரு தகப்பன் எப்படி கண்ணீர் விட்டு அழுவாரோ அப்படி என்னை பார்த்து அழுதார். நான் இருக்கேன் உனக்கு .எத்தனை படங்கள் ஆனாலும் நீ நடிக்கலாம் என சொல்லி என்னை மறுபடியும் திருப்பி நடிக்க வைத்த ஒரு ஆசான். என்ன பேசுவது என்பது எனக்கு தெரியவில்லை.

அவர் ஒரு தெய்வம் என மிகவும் எமோஷனலாகி நளினி பேசினார். அவர் பேசுவதை கேட்டு கேட்டு மேடையில் இருந்த டி ராஜேந்திரன் கண்கலங்கி அழுவதையும் பார்க்க முடிந்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.