யூத் படத்தின் முட்ட கலக்கி நாளை மாலை வெளியாகிறது

அசுரன், விடுதலை 2 படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான கென் கருணாஸ் தற்போது இயக்குநராக அறிமுகமாகும் படம் யூத். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதனை தொடர்ந்து இப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், யூத் படத்தின் முதல் சிங்கிள் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. முட்ட கலக்கி என தொடங்கும் இப்பாடலை கென் கருணாஸ் எழுதி பாடியுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட மேக்கிங் வீடியோடிவில், கென் தான் எழுதிய பாடலை ஜி.வி.பிரகாஷை பாட கூறுகிறார். முட்ட கலக்கி என்ற முதல் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.

யூத் படத்தை பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரித்துள்ளார். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், பள்ளிக்கூட பின்னணியில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிர்களின் கவனத்தை பெற்றது. 



மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.