காபி, டீ செலவு கூட வரலயே!… விஜய் சேதுபதியின் காந்தி டாக்ஸ் இவ்ளோதான் கலெக்ஷனா?!..
விஜய் சேதுபதியின் சமீபத்திய சில படங்கள் வருவதும் தெரியவில்லை தியேட்டரிலிருந்து போவதும் தெரியவில்லை. இப்படி படம் ஒன்று வெளியாகியிருக்கிறது என்பதும் ரசிகர்களுக்கு தெரியவில்லை
. சில மாதங்களுக்கு முன்பு கூட Ace என்கிற திரைப்படமும் அப்படித்தான் ரசிகர்களுக்கே தெரியாமல் வெளியாகி படுதோல்வி அடைந்தது..
தற்போது அந்த வரிசையில் காந்தி டாக்ஸ் படமும் இணைந்திருக்கிறது. இந்த படம் இந்தியில் உருவாக்கப்பட்டு தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்தப் படத்தை கிஷோர் பாண்டுரங் பெளாக்கர் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்தசாமி, அதிதி ராவ் ஹைத்ரி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார்.. கமலின் பேசும் படம் போல படத்தில் எந்த வசனமும் இருக்காது. அதேநேரம், பாடல்கள் மட்டும் இடம் பெற்றிருந்தது. ஏனோ, இந்த படம் ரசிகர்களை கவரவில்லை.

இந்த படத்திற்கு தமிழ்நாட்டில் எந்த புரமோசனும் செய்யப்படவில்லை.. அதனால என்னவோ இந்த படம் வெளியானதே ரசிகர்களுக்கு தெரியவில்லை. கடந்த 30ம் தேதி வெளியான இந்த திரைப்படம் தமிழகத்தில் மொத்தமாகவே 25 லட்சத்தை மட்டுமே வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
படம் உருவாகும் போது காபி, டீ, ஸ்னாக்ஸ், சாப்பாடு என ஒரு செலவு கணக்கு எழுதுவார்கள்.. அதைவிட குறைவான வசூலையே இந்த படம் வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது.. ஹிந்தியிலும் இந்த படம் தோல்வி அடைந்திருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

