ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா

கிங்டாவோ:

6-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் கிங்டாவோ நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 ஆண்கள் அணிகளும், 11 பெண்கள் அணிகளும் தலா 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.

இதில் பெண்களுக்கான ஒய் பிரிவில் இடம்பிடித்துள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி, தனது தொடக்க லீக் ஆட்–டத்–தில் மியான்மரை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.

இந்திய பெண்கள் அணி நேற்று தனது 2-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை வீழ்த்தியது. இதன்மூலம் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

இதேபோல், ஆண்களில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி முதலாவது லீக் ஆட்டத்தில் 3-2 என்ற கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தியது. நேற்று நடந்த கடைசி லீக் சுற்றில் இந்திய அணி வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.