வெங்கட்பிரபுவை SK கழட்டிவிட இதுதான் காரணமா?!. இன்னும் இவர் திருந்தலயே!….
அமரன் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டார். ஆனால் கோட் படம் கலவையான விமர்சனங்களை கொடுத்ததால் வெங்கட் பிரபுவை கழட்டிவிட முடிவு செய்தார் எஸ்.கே.
எனவே பல மாதங்கள் சிவகார்த்திகேயனுக்காக காத்திருந்தார் வெங்கட்பிரபு. மேலும் சிவகார்த்திகேயனை சம்மதிக்க வைக்க பல வகைகளிலும் முயற்சி செய்தார்…
அந்த இடைவெளியில் மதராஸி, பராசக்தி போன்ற படங்களில் நடித்து முடித்து விட்டார் சிவகார்த்திகேயன்.. அந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை
.. இதனால் வெங்கட்பிரபு படத்தின் பட்ஜெட்டை தயாரிப்பு நிறுவனம் குறைத்தது.. சில நாட்களுக்கு முன்பு இலங்கை சென்ற வெங்கட் பிரபு இந்த படத்திற்கான கதை, திரைக்கதையை எழுதி முடித்ததாக தெரிகிறது..
ஆனால், சமீபத்தில் மலேசியாவுக்கு சென்ற வெங்கட் பிரபு அங்கிருந்து தயாரிப்பு நிறுவனத்தை தொடர்புகொண்டு என்னுடைய உதவி இயக்குனர்களில் நான்கு பேரை விமானம் ஏற்றி இங்கே அனுப்பி விடுங்கள்.. படத்தின் இரண்டாம் பாதியை ரெடி பண்ண வேண்டும் என சொல்ல தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி அடைந்துவிட்டதாம். ‘அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. நீங்கள் சென்னையில் வந்து கதை எழுதுங்கள்’ என சொல்லிவிட சொல்லிவிட்டதாம்..
இதன் காரணமாகத்தான் தாய்க்கிழவி பட இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு குறுகிய கால தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்த திட்டமிட்டிருக்கிறார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்ரவரி 17ம் தேதி இப்படம் பற்றிய புரமோ வீடியோ வெளியாகும் என்கிறார்கள்.
கதையை எழுதாமலேயே படப்பிடிப்புக்கு போகும் பழக்கம் வெங்கட் பிரபுக்கு உண்டு. கோட் படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேலாகியும் அடுத்த படத்திற்கான முழு கதையையும் இன்னமும் அவர் தயார் செய்யாமல் இருப்பது நல்லதல்ல என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்..
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


