ஸ்ரீலீலாவை தொடர்ந்து தனுஷ் படத்தில் இணைந்த சாய் பல்லவி
தனுஷ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்திற்கு `D55 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி `D55 படத்தை பெரிய அளவில் ஆக்ஷன் அதிரடி படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார் என கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து, இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. மேலும், D55 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டது.
இந்நிலையில், D55 படத்தின் சாய் பல்லவி நடிக்கிறார் என்று படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


