Ajith: சாயம் எல்லாம் வெளுத்து போச்சா.. இந்தளவுக்கு அஜித் இறங்கிட்டாரா?
தற்போது அஜித் துபாயில் நடக்கும் கார் ரேஸில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவருடைய அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைய இருக்கிறார். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
மீண்டும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் அந்த படத்தை தயாரிக்கிறார்களா என்பது தெரியவில்லை. இதற்கு இடையில் எந்த தயாரிப்பாளரும் படத்தை தயாரிக்க முன் வராததால் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் இடம் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இதில் பெரிய விஷயமாக பார்க்கப்படுவது அஜித்தின் சம்பளம் தான். அதனாலேயே பல தயாரிப்பு நிறுவனங்கள் அஜித்தின் படத்தை தயாரிக்க தயங்குவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் அஜித் பற்றிய இன்னொரு தகவலும் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றன. தன்னை பார்ப்பதற்கு நாள்தோறும் ரேஸ் ட்ராக்கில் ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். அதோடு அஜித்துடன் புகைப்படங்களும் எடுத்துக் கொள்கின்றனர். இதனால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்காகவோ என்னவோ திடீரென ஒரு கண்டிஷனை விதித்திருக்கிறார்களாம். அஜித்துடன் போட்டோ எடுத்துக் கொள்வதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் 750 ரூபாய் கட்டணம் வசூலிக்க போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இது அஜித்திற்கு தெரியுமா தெரியாதா? என்பது சந்தேகம். இருந்தாலும் இப்படி வசூலிக்கிறார்கள் என்றால் அஜித்திற்கு தெரிந்தே தான் இது நடந்திருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதுவரை அஜித்தை பற்றி மக்கள் மனதில் ஒரு அபிப்பிராயம் இருந்தது. ஆனால் இந்த அளவு அஜித் இறங்கிவிட்டாரா என்று பார்க்கும் பொழுது ஒரு பக்கம் வருத்தமாகவும் இருப்பதாகவும்சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்ல சமீபகாலமாக அஜித்தை பார்ப்பதற்கு பிரபலங்களும் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். அதற்கு பின்னணியில் ஒரு காரணம் இருப்பதாக தெரிகிறது. ரிலையன்ஸ் குழுமத்திலிருந்து கேம்பா நிறுவனத்திற்காக அஜித்திற்கு ஸ்பான்சர் வழங்கி வருகிறார்கள். அதனால் கூட்டம் இருந்தால் தான் பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும் என்பதற்காகவே அஜித் தரப்பிலிருந்து பிரபலங்களை வரவழைத்து வியாபார ரீதியாக இப்படி ஒரு ஏற்பாடு பண்ணுவதாக தெரிகிறது. அஜித்தை பார்ப்பதற்கு ஒரு கூட்டம் வந்தாலும் அங்கு வருகை தரும் பிரபலங்களை பார்ப்பதற்கும் சில கூட்டம் வரத்தான் செய்யும். இதுவும் ஒரு வகை பிசினஸ் தான் என்று கூறப்படுகின்றன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


