Vijayakanth: உலகத்துல எந்த ஹீரோவும் இத பண்ணல! விஜயகாந்த் பற்றி தயாரிப்பாளர் சொன்ன பெரிய ஷாக்
தமிழ் சினிமாவில் ஒரு தன்னிகரற்ற மனிதராக ஹீரோவாக ஜொலித்தவர் நடிகர் விஜயகாந்த். அவர் இன்று இல்லாவிட்டாலும் அவருடைய பெருமைகளை பற்றியும் மகத்தான குணத்தை பற்றியும் நாம் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். இதற்கு முன் எம்ஜிஆரை பற்றித்தான் அனைவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். எம்ஜிஆருக்கு பிறகு விஜயகாந்த் தான் அனைவர் மனதிலும் நின்று ஒளி வீசிக் கொண்டிருக்கிறார்.
கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் விஜயகாந்த். எம்ஜிஆர் எப்படி தன் படங்களை பார்த்து இளைஞர்கள் நல்ல முறையில் வளரவேண்டும் என்று நினைத்தாரோ அதே போல் விஜயகாந்தும் தன் படங்களின் மூலம் தமிழ் மொழி பற்றியும் தமிழனாக பிறந்ததன் பெருமை பற்றியும் பல வகைகளில் பேசியிருப்பார்.
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் தேனப்பனும் விஜயகாந்த் பற்றி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது தமிழில் கிட்டத்தட்ட 55 புதுமுக இயக்குனர்களை அறிமுகமாக்கியவர் விஜயகாந்த். இதுவரை உலகத்தில் எந்த ஹீரோவும் அப்படி செய்ததில்லை என்று கூறியுள்ளார். அதுமட்டுமில்ல விஜயகாந்திடம் இருந்து தைரியம், நேர்மை இதை எல்லாவற்றையும் நான் கற்றுக் கொண்டேன் என்று தேனப்பன் கூறியுள்ளார்.
மேலும் விஜயகாந்தை வைத்து தேனப்பன் தயாரித்த முதல் படம் சொல்வதெல்லாம் உண்மை. அந்தப் படத்தால் தேனப்பனுக்கு 3.50 லட்சம் நஷ்டமாம். இருந்தாலும் என் நஷ்டத்தை அவரே பொறுப்பேற்றுக் கொண்டார் என்றும் விஜயகாந்த் கூறினார். அதற்கு அடுத்தபடியாக பூந்தோட்ட காவல்காரன் படத்தை தேனப்பன் எடுக்க அந்தப் படத்தால் 7 லட்சம் லாபம் வந்ததாம்.
அதை அப்படியே விஜயகாந்தும் ராவுத்தரும் தன்னிடம் வந்து கொடுத்ததாக தேனப்பன் கூறினார். விஜயகாந்தும் ராவுத்தரும் இல்லையெனில் நான் திரும்பவும் ஊருக்கே போயிருப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


