D55 படத்தில் தனுஷுக்கு ஜோடி யார்?- இன்று மாலை அறிவிப்பு வெளியாகிறது
தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி இணையும் படம் D55. இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி D55 படத்தை ஒரு பெரிய அளவில் ஆக்ஷன் அதிரடி படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார் என கூறப்பட்டது. இதனை தொடர்ந்து, இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், D55 படத்தின் முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, D55 படத்தின் கதாநாயகி குறித்த அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே மற்றும் சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
#D55 - the next announcement is HER-e
— Wunderbar Films (@wunderbarfilms) January 31, 2026
Get ready for the unveil at 6 PM today ? @dhanushkraja @Rajkumar_KP @wunderbarfilms @RTakeStudios @SaiAbhyankkar @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams pic.twitter.com/3s8CY4SEjt
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


