தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை
பாங்காக்:
தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது.
இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை தேவிகா சிஹாத், தாய்லாந்தின் சுபனிதா கடேதோங் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய தேவிகா சிஹாத் 21-19, 21-18 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனையான இஷாராணி பரூக் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


