சித்தார்த்தின் புது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 3BHK படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சித்தார்த் நடித்து வரும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் ரவுடி அண்ட் கோ படம் உருவாகி வருகிறது. டக்கர் படத்திற்கு பிறகு சித்தார்த் மற்றும் கார்த்திக் ஜி கிரிஷ் இணையும் இரண்டாவது படம் இதுவாகும். இந்தப் படத்தில் ராஷி கன்னா கதாநாயகியாக நடிக்கிறார். யோகி பாபு, சுனில் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ரேவா இசையமைக்கிறார். இந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள ரவுடி அண்ட் கோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Recruitment closed. Chaos unlocked.
— Passion Studios (@PassionStudios_) January 26, 2026
The New Rowdy batch is here ??? #RowdyAndCo FIRST LOOK ? #Siddharth @Karthik_G_Krish @passionstudios_ @sudhans2017 @revaamusic @aravinndsingh @KSamy1878915 @PradeepERagav @Sureshchandraa @tuneyjohn @PharsFilm @abdulnassaroffl @donechannel1 pic.twitter.com/06NlQs7X9G
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

