அடுத்த 4 படங்கள்.. யார் ஹீரோ?!.. எல்லாத்தையும் சொல்லிட்டாரே லோகேஷ்!…

லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த லியோ, கூலி ஆகிய இரண்டு படங்களும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றது. லியோ படத்தின் இரண்டாம் பாதி விஜய் ரசிகர்களையே கொஞ்சம் ஏமாற்றியது.. கூலி திரைப்படம் கடுமையான விமர்சனத்தை சிந்தித்தது
. அதனால்தான் ரஜினி, கமல் இருவரையும் வைத்து எடுக்கவிருந்த படமும் லோகேஷின் கையை விட்டுப் போனதாக சொல்லப்பட்டது.

ஒருபக்கம் லோகேஷ் கனகராஜ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்திலும் நடிக்கத் தொடங்கினார்.. மேலும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து லோகேஷ் ஒரு புதிய படத்தை இயக்கப் போவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஒரு பக்கம் கைதி 2 படம் என்னவாயிற்று? என்கிற கேள்வியும் ரசிகர்களிடம் இருக்கிறது.

இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் விளக்கமளித்த லோகேஷ் கனகராஜ் ‘ரஜினி கமல் இருவருக்கும் ஒரு கதையை உருவாக்கினேன்.. இரண்டு கதைகளுமே அவர்களுக்கு பிடித்திருந்தது. ஆனால் இருவருமே தொடர்ந்து ஆக்சன் கதைகளில் நடித்து வருவதால் இந்த கதை இப்போது வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது /

அருண் மாதேஸ்வரன் படத்தில் நடித்து வருகிறேன்.. அடுத்து அல்லு அர்ஜுன் படத்தை இயக்கப் போகிறேன்.. அந்த படத்தை முடித்துவிட்டு கைதி 2 படத்தை எடுப்பேன். அதன்பின் விக்ரம் 2, ரோலக்ஸ் ஆகிய படங்களும் இருக்கிறது.. கண்டிப்பாக அந்த மூன்று படங்களையும் எடுப்பேன்
. LCU முடிந்து விட்டதாக எல்லோரும் பேசுகிறார்கள்.. ஆனால் முடியவில்லை LCU விரைவில் ஓப்பன் ஆகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.