இந்தோனேசியா மாஸ்டர்ஸ்: காலிறுதியில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் அதிர்ச்சி தோல்வி

ஜகார்த்தா:

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் இந்தோனேசியாவில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் சென் யூபி உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சீன வீராங்கனை 21-13, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம பி.வி.சிந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென்னை 18-21, 20-22 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் தாய்லாந்தின் பக்கப்பொன் தீரரத்சகுல்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.