Lackdown: ஒரு வழியாக லாக் டவுனுக்கு தேதி குறிச்சாச்சு…

அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள லாக் டவுன் திரைப்படம் வெளியீடு பலமுறை தள்ளிவைக்கப்பட்ட பிறகு, தற்போது வரும் ஜனவரி 30-ம் தேதி வெளியாகிறது.

லைக்கா புரொடெக்சன் தயாரிப்பில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள பட்ம் லாக் டவுன். சார்லி, நிரோஷா, மஹானா சஞ்சீவி, லிவிங்ஸ்டன், அமு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படதை ஏ.ஆர்.ஜீவா இயக்கியுள்ளார். இது முழுக்க முழுக்க அனுபமா பரமேஸ்வரனைச் சுற்றியே நகரும் ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் வகை படமாகும். இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 5 ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்பு டிச.12ம் தேதி வெளியாகும் என்றும் கூரப்பட்டது ஆனால் படம் வெளியாகவில்லை. இதென்னடா லைக்கவுக்கு வந்த சோதனை என ரசிர்கள் பலர் கருதினர்.

இந்த நிலையில் லாக்டவுன் படம் ரிலீஸ் குறித்து இன்று படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற 30ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.