எனக்கு செட் ஆகாது!.. விஜயுடன் நடிக்க மறுத்த தனுஷ்!.. டைரக்டர் சொன்ன பிளாஷ்பேக்!…

என் ராசாவின் மனசிலே உள்ளிட்ட சில படங்களை இயக்கிய கஸ்தூரி ராஜாவின் இளைய மகன் தனுஷ். இவரின் உண்மையான பெயர் வெங்கடேஷ் பிரபு. பத்தாம் வகுப்புக்கு மேல் பெரிதாக படிக்க ஆர்வம் ஏற்படவில்லை. அப்போது கடனில் இருந்த கஸ்தூரிராஜா மகன் செல்வராகவனை நம்பி சில லட்சங்களை ஏற்பாடு செய்து துள்ளுவதோ இளமை படத்தை எடுத்தார். அதில் தனது மகன் வெங்கடேஷ் பிரபுவை ஹீரோவாக நடிக்க வைத்தார்.. பிரபுவுக்கு தனுஷ் என பெயர் மாற்றப்பட்டது. (உபயம் – குருதிப்புனல் படத்தில் வரும் ஆபரேஷன் தனுஷ்)

வியாபாரத்திற்காக டைட்டில் இயக்குனர் என கஸ்தூரி ராஜா பெயர் வந்தாலும் உண்மையில் அந்த படத்தை இயக்கியது செல்வராகவன்தான் என சொல்கிறார்கள். படம் சர்ச்சையானலும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தது. கஸ்தூரிராஜா கடன் எல்லாம் இந்த படத்தால் அடைந்து போனது. மீண்டும் சென்னையில் குடும்பத்தோடு இருக்கலாம் என்று நம்பிக்கையை கஸ்தூரிராஜாவுக்கு கொடுத்தது.

அதன்பின் தனுஷ் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து தற்போது உச்சம் தொட்டிருக்கிறார். 50 படங்களுக்கும் மேல் நடித்து விட்டார். 60 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். துவக்கத்திலிருந்து இப்போது வரை தனுஷ் ஹீரோவாக மட்டுமே நடித்திருக்கிறார். வேறொரு நடிகருடன் இணைந்து அவர் எந்த படத்திலும் நடித்ததில்லை. அதில் மிக தெளிவாக இருக்கிறார் தனுஷ். இந்த தெளிவு இப்போது இல்லை.. அவர் சினிமாவில் நடிக்க துவங்கிய போதே இருந்தது என்கிறார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்.

சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய ஏ.வெங்கடேஷ் ‘விஜயை வைத்து பகவதி படத்தை இயக்கிய போது விஜயின் தம்பி கதாபாத்திரத்தில் தனுசை நடிக்கவைக்கலம் என யோசித்தேன்.. அப்போதுதான் துள்ளுவதோ இளமை படம் வெளியாகியிருந்தது. அதோடு பகவதி படத்தின் தயாரிப்பாளர்கள் கஸ்தூரிராஜாக்கும் நெருக்கமானவர் என்பதால் அவர்களிடம் பேசினோம்,

தனுஷிடம் கேட்டபோது ‘எனக்கு சரியாக இருக்காது’ என்றார். ‘விஜயகாந்துடன் விஜய் செந்தூரப்பாண்டி படத்தில் நடித்து B,C சென்டர்களில் எப்படி ரீச் ஆனாரோ அப்படி நீங்களும் ரீச் ஆவீர்கள்’ என்று சொன்னேன். அதற்கு தனுஷ் ‘காதல் கொண்டேன் ரிலீஸ் ஆனால் நான் பி,சி சென்டர்களில் இறங்கி விடுவேன்’ என்று சொன்னார். அப்போதே அவ்வளவு தெளிவாக இருந்தார் தனுஷ்.. இப்போதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார். பகவதி படத்தில் விஜயின் தம்பியாக நடிகர் ஜெய் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.