வங்கதேசத்திற்கு 24 மணி நேரம் கெடு கொடுத்த அமித்ஷா மகன்.. ஆடிபோன வங்கதேச கிரிக்கெட் வாரியம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஜனவரி 21 அன்று நடத்திய வாரிய கூட்டத்தில், வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்துள்ளது. 
 

இந்தியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டிகளில், குறிப்பாக கொல்கத்தா மற்றும் மும்பையில் இங்கிலாந்து மற்றும் நேபாள அணிகளுக்கு எதிராக வங்கதேசம் விளையாட வேண்டிய போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிராக 14-2 என்ற கணக்கில் வாக்குகள் பதிவாகின.

 

பாதுகாப்பு குறித்த சுதந்திரமான ஆய்வறிக்கைகள் இந்தியாவில் எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என்று உறுதி செய்ததை அடுத்து ஐசிசி தலைவர் ஜெய்ஷா இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. தற்போது வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு 24 மணிநேரக் கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்திற்குள் போட்டிகளில் பங்கேற்பதை உறுதி செய்யாவிட்டால், வங்கதேசத்திற்கு பதிலாக தரவரிசையில் அடுத்த இடத்தில் உள்ள ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்படும்.

 

பிசிபி தலைவர் அமினுல் இஸ்லாம் இது குறித்து முடிவெடுக்க டாக்காவில் உள்ள இடைக்கால அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறார். அதேவேளையில், கடந்த காலங்களில் சாம்பியன்ஸ் டிராபி போன்ற தொடர்களில் பயன்படுத்தப்பட்ட ஹைப்ரிட் மாடல் முறையை சுட்டிக்காட்டி பாகிஸ்தானை சேர்ந்த விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

 

வங்கதேசத்தின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பதை உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.