ஜனநாயகன் விவகாரம்: சென்சார் போர்டு விதிகளை மீறி கோர்ட்டுக்கு சென்றால் ஜெயிக்கமுடியாது - மோகன் ஜி

ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ஜன நாயகன். பொங்கலை முன்னிட்டு, ஜன.9ஆம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் இழுபறியால் தற்போதுவரை வெளியாகவில்லை. இதனிடையே படத்திற்கு விரைந்து சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி படக்குழு உயர்நீதிமன்றத்தை நாடியது. இதனையடுத்து ஜனவரி 9 அன்று தனி நீதிபதி பி.டி.ஆஷா இப்படத்திற்கு U/A 16+* சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.

இருப்பினும், இந்த உத்தரவை எதிர்த்து மத்திய தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததால், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அத்தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியநிலையில் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றமே ஜனவரி 20 அன்று இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று பொங்கலன்று உத்தரவிட்டது.

இதனையடுத்து ஜன நாயகன் தணிக்கை விவகார வழக்கு ஜனவரி 20 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தயாரிப்பு நிறுவனம், தணிக்கை வாரியம் என இருதரப்புகளும் மாறி மாறி தங்கள் வாதங்கள் முன்வைத்தன. தொடர்ந்து இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தது உயர் நீதிமன்றம். இதனால் ஜன நாயகன் வெளியீடு இன்னும் தள்ளிப்போகும் சூழல் உருவாகி உள்ளது.

இந்நிலையில், திரௌபதி 2 படம் தொடர்பாக பேட்டி அளித்த மோகன் ஜி, சென்சார் தொடர்பாக பேசினார்.

அந்த பேட்டியில், "சென்சார் போர்டுக்கு என்று சில விதிமுறைகள் உள்ளது. அந்த விதிமுறைகளை பின்பற்றாமல் நீதிமன்றத்துக்கு சென்றால் ஜெயிக்க முடியாது " என்று கூறி விஜய் ரசிகர்களை சீண்டியுள்ளார். . 

If you Break the Censor rule and go to the court, You wont Win.❌- Mohan G. pic.twitter.com/tqAqPAeVZb

— Christopher Kanagaraj (@Chrissuccess) January 22, 2026

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.