ஐபிஎல் போட்டிகளில் AI போர்.. ரூ.270 கோடிக்கு புதிய ஒப்பந்தம்..!

 

2026-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஸ்பான்சர்ஷிப் களத்தில் ஒரு மிகப்பெரிய தொழில்நுட்ப புரட்சி வெடித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் அதிநவீன செயற்கை நுண்ணறிவு பிரிவான ஜெமினி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் மூன்று ஆண்டுகால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. சுமார் ரூ.270 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம், ஐபிஎல் வரலாற்றில் ஏஐ தளங்களுடன் செய்யப்பட்ட மிகப்பெரிய வர்த்தக டீல் ஆகும்.

 

ஏற்கனவே, மகளிர் பிரீமியர் லீக் தொடரின் ஸ்பான்சராக மைக்ரோசாஃப்ட் ஆதரவு பெற்ற ChatGPT ரூ.16 கோடிக்கு 2 ஆண்டு ஒப்பந்தம் இருக்கும் நிலையில், தற்போது ஆண்கள் ஐபிஎல் தொடருக்குள் ஜெமினி நுழைந்துள்ளது. இது தொழில்நுட்ப உலகில் முன்னணியில் உள்ள இரண்டு ஏஐ ஜாம்பவான்களுக்கு இடையே கிரிக்கெட் மைதானத்தில் ஒரு புதிய டெக் போரை உருவாக்கியுள்ளது. 

 

கடந்த ஆண்டு ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட, பிசிசிஐ இத்தகைய புதிய தலைமுறை தொழில்நுட்ப நிறுவனங்களை வரவேற்றுள்ளது.

 

மார்ச் 26 அன்று தொடங்கவுள்ள ஐபிஎல் 2026-இல், மைதானத்தை சுற்றியுள்ள விளம்பர பலகைகள் முதல் டிஜிட்டல் திரைகள் வரை இனி ஜெமினி மயம் தான்!

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.