U19 உலகக் கோப்பையில் அதிவேக சதம்: சூர்யவன்ஷி சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய வீரர்

வின்ட்ஹோக்:

16-வது இளையோர் (19 வயதுக்கு உட்பட்டோர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

வின்ட்ஹோக்கில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, ஜப்பான் அணியை (ஏ பிரிவு) எதிர்கொண்டது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த ஜப்பான் அணி 8 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 29.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 204 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றது. வில் மலாஜ்சுக் 102 ரன்னும் (55 பந்து, 12 பவுண்டரி, 5 சிக்சர்) நிதேஷ் சாமுவேல் 60 ரன்னும் திரட்டி வெற்றியை எளிதாக்கினர். முன்னதாக மலாஜ்சுக் 51 பந்துகளில் சதத்தை கடந்து, இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார்.

Will Malajczuk smashes a record-breaking ton against Japan ?Follow #U19WorldCup LIVE, broadcast details ➡️ https://t.co/gGyxHprYVk pic.twitter.com/45YdpOMhao

— ICC Cricket World Cup (@cricketworldcup) January 20, 2026

இதற்கு முன்னர் 52 பந்தில் இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி சதம் அடித்திருந்ததே சாதனையாக இருந்த நிலையில் அதனை ஆஸ்திரேலியா வீரர் முறியடித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.