வாஷிங்டன் சுந்தர் அவுட்.. ஸ்ரேயாஸ் ஐயர் இன்.. இந்திய கிரிக்கெட் அணியில் திடீர் மாற்றங்கள்..!

டி20 உலகக்கோப்பை 2026 தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இந்திய டி20 அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயம் காரணமாக விலகியுள்ள வாஷிங்டன் சுந்தர் மற்றும் திலக் வர்மா ஆகியோருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர், கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் அபாரமான ஃபார்மில் இருந்தார். 2024-ல் கேகேஆர் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த அவர், 2025-ல் பஞ்சாப் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார். கடந்த சீசனில் 175 ஸ்ட்ரைக் ரேட்டில் 604 ரன்கள் குவித்து அசத்திய ஐயர், 2023க்கு பிறகு இப்போதுதான் இந்திய டி20 அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள திலக் வர்மாவுக்கு பதிலாக முதல் மூன்று போட்டிகளில் ஐயர் விளையாடுவார்.

 

அதேபோல், வதோதராவில் நடந்த ஒருநாள் போட்டியின் போது விலா எலும்பு பகுதியில் காயமடைந்த ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் அணியில் இணைந்துள்ளார். 

 

உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் காயம் ஏற்பட்டால் மாற்று வீரர்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.

 

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.