தாயை காப்பாற்ற துடிக்கும் மகன் கதையில் கிருஷ்ணா...

ஜெய் அமர்சிங் இயக்கத்தில் பி.ஜே.கிஷோர் தயாரிப்பில் காமெடி மற்றும் பொழுதுபோக்கு ஜானரில் உருவாகும் படம் தி மம்மி ரிட்டர்ன்ஸ். படத்தின் பூஜை சென்னையில் தொடங்கியது. விழாவில் இயக்குனர்கள் விஷ்ணுவர்தன், ஐ.அகமது ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

படத்தில் கிருஷ்ணா, தேவதர்ஷினி, ஸ்வாதி, கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பியோர்ன், தீபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

படம் குறித்து இயக்குநர் ஜெய் அமர் சிங் கூறியதாவது:-

நான் லண்டனில் ஃபிலிம் இண்ட்ஸ்டிடியூட் படித்து விட்டு சென்னையில் இயக்குநர் அகமதிடம் "என்றென்றும் புன்னகை" படத்தில் பணிபுரிந்தேன். ஆக்சன் படங்கள் அதிகமாக வரும் இன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் காமெடி படங்களுக்கு ஏங்குகிறார்கள். எனக்கும் காமெடி படங்கள் தான் அதிகம் பிடிக்கும். எனவே தான் இந்தப்படத்தை முழுக்க முழுக்க ரசிகர்கள் சிரித்து மகிழும் படமாக வடிவமைத்துள்ளேன். ஒரு தாயை காப்பாற்ற மகன் என்னவெல்லாம் செய்கிறான் என்பது தான் படம், எமோஷனலான கதையை, மக்கள் வயிறு வலிக்க சிரிக்கும்படி சொல்லப்போகிறோம் என்றார்.

இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். மணிகண்ட பாலாஜி எடிட்டிங் செய்கிறார். கார்த்திக் சுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்கிறார் என்றார். 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.