மாத ராசிபலன்
தை மாத ராசிபலன் ஜனவரி 15 முதல் பிப்ரவரி 12 வரை மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்களுடன் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடஶ்ரீ முருகப்ரியன்.
மேஷம் ராசி அன்பர்களே!
குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் உறவினர்கள் வகையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட சாத்தியம் உள்ளதால், பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. மாதத்தின் பிற்பகுதியில் சகோதரர்களால் பிரச்னைகளும், கடன் தொல்லைகளும் ஏற்படக்கூடும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களின் அறிவுரையின்படி நடந்துகொண்டு, அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அதிகாரிகள் உங்களிடம் ஆலோசனை கேட்பார்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு பதவிஉயர்வுக்கும் வாய்ப்பு உண்டு.
தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த மாதம் ஈடுபடலாம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். கண வரின் அன்பும் ஆதரவும் மனதுக்கு மகிழ்ச்சி தரும். பணிக்குச் செல்லும் பெண்களுக்கு, அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
சாதகமான நாள்கள்: ஜன: 17,22,28,31 பிப்: 1,4,6
சந்திராஷ்டமம்: ஜன 15 முதல் 16 காலை வரை; பிப் 9 அதிகாலை முதல் 10,11,12 பகல் வரை
அதிர்ஷ்ட எண்கள்:1,9
வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை, முருகப் பெருமான்
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் கந்த சஷ்டி பாராயணம் செய்வதும், ஞாயிற்றுக்கிழமைகளில் துர்கைக்கு அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.
ரிஷபம் ராசி அன்பர்களே!
திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் எதிர்ப்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவி னர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி, சுமுகமான சூழ்நிலை உண்டாகும். வெளி வட் டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். மாதப் பிற்பகுதியில் குடும்பப் பெரியவர்களால் நன்மைகள் நடக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங் களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற் படும். அவ்வப்போது தாயாருடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அவருடைய உடல்நலனிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. தாய்வழி உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.
முன்னேற்றம் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். ஆனால், வேலைப்பளு அதிகரிக்கும். சிலர் இடமாற்றத்தையும், சிலர் பொல்லாப்பையும் சந்திக்கலாம். பொறுமையுடன் அனுசரித்து போகவும். வேலையில் கவனமாக இருக்கவும்.
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படும். உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். மாதப் பிற்பகுதியில் கொடுக்கல் - வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கை அவசியம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். கணவரின் அன்பும் அவர் வழி உறவினர்களால் நன்மைகளும் ஏற்படும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண் களுக்கு சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
சாதகமான நாள்கள்: ஜன: 21,26,27; பிப்: 2,4,9,11
சந்திராஷ்டமம்: ஜன 16 காலை முதல் 17,18 மாலை வரை; சந்திராஷ்டமம் : பிப் 12 பகல் முதல்
அதிர்ஷ்ட எண்கள்: 4,6
வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை, மகாவிஷ்ணு
பரிகாரம்: புதன்கிழமைகளில் விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும், வியாழக்கிழமை களில் தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.
மிதுனம் ராசி அன்பர்களே!
பணவரவு கணிசமாக உயரும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக் கும். எதையும் சாதிக்கவேண்டும் என்ற மனஉறுதி ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்துடன் விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களால் உதவி கிடைக்கும் அதே நேரத்தில் அவர்களில் சிலரால் சிறு உபத்திரவமும் ஏற்படலாம். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் சற்று பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. வெளி வட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணைவழி உறவுகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். அவர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் ஒரு படி உயரும். தந்தைவழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் முடிவதில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். மாதப் பிற்பகுதியில் சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.
சிலருக்கு விரும்பியபடி இடமாற்றம் கிடைக்கும். உன்னதமான பலன்கள் ஏற்படும். எதிலும் வெற்றி காணலாம். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். கோரிக்கைகள் நிறைவேறும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் கிடைக்கும். மாத முற்பகுதியில் வீண் விரயம் ஏற்பட சாத்தியமுள்ளது. புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன், வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளையும் தவிர்க்கவும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பல வகைகளிலும் முன்னேற்றம் தரும் மாதமாக இருக்கும். புகுந்த வீட்டு உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு சிறப்பான பலன்கள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கக்கூடும்.
சாதகமான நாள்கள்: ஜன: 17,22,26,29; பிப்: 1,5,7,9,11
சந்திராஷ்டமம்: ஜன 18 மாலை முதல் 19,20 இரவு வரை
அதிர்ஷ்ட எண்கள்: 3,7
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான், ஆஞ்சநேயர்
பரிகாரம்: திங்கள்தோறும் சிவபெருமானுக்கு வில்வதளத்தால் அர்ச்சனை செய்வதும், சிவஸ்துதிகளைப் பாராயணம் செய்வதும் நன்மை தரும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடவும்.
கடகம் ராசி அன்பர்களே!
வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத் தும் மிக எளிதாக வெற்றி அடையும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதுடன், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படும். குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். சுபநிகழ்ச்சிகளை திட்டமிட்டபடி நடத்தி முடிப்பீர்கள். தந்தையுடன் இருந்து வரும் மோதல் போக்கு நீங்கி, சுமுகமான நிலை ஏற்படும். உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு வெளிமாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். இதுவரை இருந்த உடல் உபாதைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும். இரவு நேரங்களில் தொலைதூரப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.
அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அலுவலகத்தில் இருந்து வந்த அலைச்சல், பணிச்சுமை குறைவதால், உற்சாகமாகக் காணப்படுவீர்கள். நிர்வாகத் திடம் முக்கிய கோரிக்கை வைப்பதற்கு உகந்த மாதம். அலுவலகத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பல வகைகளிலும் அனுகூலமான மாதம் இது.
சாதகமான நாள்கள்: ஜன: 16,18,26,27,31; பிப்: 1,3,6,8,9
சந்திராஷ்டமம்: ஜன 20 இரவு முதல் 21,22,23 காலை வரை
அதிர்ஷ்ட எண்கள்: 1,7,9
வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், விநாயகர்
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்வதும், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வதும், வெள்ளிக்கிழமைகளில் விநாயகருக்கு அறுகம்புல்லால் அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.
சிம்மம் ராசி அன்பர்களே!
குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். உங்கள் அறிவுரைகளைக் கேட்டு அதன்படி நடப்பார்கள். சிலருக்கு பிள்ளைகள் வழியில் பொருள் வரவுக்கும் வாய்ப்பு உண்டு. புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக் கூடும் என்பதால் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உறவினர்களிடையே மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க விவகாரங்கள் இழுபறிக்குப் பிறகு சாதகமாக முடியும். திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகள் நல்லபடி நடைபெறும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். ஆனால், மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சகோதரர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.
பணிச்சுமையும், அலைச்சலும் அதிகமாக இருக்கும். ஆனால், அதற்கேற்ற பலன் கிடைக்கும். சிலருக்கு சலுகையுடன் கூடிய இடமாற்றம் உண்டு. மாத முற்பகுதியில் பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சில சலுகைகள் கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த கடன் எளிதில் கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் கூடுதலாக உழைக்கவேண்டும். ஆனால், அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்களால் வியாபாரத்துக்குத் தேவையான பண உதவி கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் இழுபறிக்குப் பிறகு அனுகூலமாக முடியும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிரமம் எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பணிகளில் கூடுதல் கவனம் தேவை.
சாதகமான நாள்கள்: ஜன: 14, 16, 17, 22, 23, 27, 28 பிப்: 1,3,7,9,12
சந்திராஷ்டமம்: ஜன 23 காலை முதல் 24,25 பகல் வரை
அதிர்ஷ்ட எண்கள்: 2,4,7
வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர், பெருமாள்
பரிகாரம்: விநாயகர் அகவல் பாராயணம் செய்வதும், விநாயகருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து, தும்பைப் பூக்களால் அர்ச்சனை செய்வதும் நன்மைகளைத் தரும்.
கன்னி ராசி அன்பர்களே!
அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். தெய்வ பக்தியும் ஆன்மிகத்தில் நாட்டமும் அதிகரிக்கும். புண்ணியத் தலங்களை தரிசித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். பெண்கள் மூலம் பொருள் சேர்க்கை உண்டாகும். உறவினர்களால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுமானவரை அளவோடு பேசவும். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்கள் வருகை சில சங்க டங்களைத் தரும் என்றாலும் பாதிப்பு இருக்காது. மாதப் பிற்பகுதியில் சகோதரர்களிடம் எதிர் பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும் என்பதால் சற்று எச்சரிக்கையாக நடந்துகொள்ளவும்.
அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்டுச் செயல்படுவார்கள். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அதிகா
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

