ஹோபர்ட் ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம் அதிர்ச்சி தோல்வி!..


ஆஸ்திரேலியா கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில் அது தொடர்பான முதல் சுற்று போட்டி இன்று தொடங்கியது.

இந்த போட்டிகள் விளையாட வைல்ட் அனுமதி பெற்ற வீனஸ் வில்லியம்ஸ் இந்த போட்டியிலும் விளையாட வைல்ட் காடு அனுமதி பெற்றிருந்தார்.இன்று நடந்த போட்டியில் ஜெர்மனியை சேர்ந்த தட்ஜனா மரியாவை எதிர்கொண்டார். ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற அந்த போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ் 4-6, 3-6 என்கிற நேர் செட்டில் தோல்வியை சந்தித்தார்.

ஏற்கனவே கடந்த வாரம் நியூசிலாந்து நடந்த ஆக்லாந்து போட்டியிலும் வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில் தோல்வியை தழுவியிருந்தார்.ஆஸ்திரேலியா ஓபன் போட்டியில் இரண்டு முறை இறுதிப்போட்டி வரை முன்னேறிய வீனஸ் வில்லியம்ஸ் இரண்டு முறையும் அவரின் சகோதரி செரீனா வில்லியம்ஸிடம் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்க்து.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.