மகளிர் ஐபிஎல் போட்டி.. நாளை முதல் ரசிகர்களுக்கு மைதானத்தில் அனுமதி இல்லை.. ஏன்?
மும்பை மற்றும் நவி மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளுக்குத் தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நாளை முதல் மூன்று நாட்களுக்கு மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இதற்கு காரணம், மும்பையில் நடைபெறவிருக்கும் மாநகராட்சித் தேர்தல் ஆகும். தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காகப் பெருமளவிலான காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுவதால், கிரிக்கெட் போட்டிக்கு தேவையான கூடுதல் பாதுகாப்பை வழங்க முடியாது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடக்கும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் ஜனவரி 17 முதல் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


