நியூசிலாந்து கொடுத்த 301 ரன்கள் இலக்கு.. ரோஹித் சர்மா அவுட்.. இலக்கை எட்டுமா இந்தியா..!
வடோதராவில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், 301 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, டேரில் மிட்செல்லின் சிறப்பான ஆட்டத்தால் (84 ரன்கள்) 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்தது. இந்தியத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பதிலுக்கு விளையாடி வரும் இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அதிரடியாக ஆட முயன்ற ரோகித் சர்மா 26 ரன்களில் ஜேமிசன் பந்துவீச்சில் பிரேஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தற்போது 9.2 ஓவர்கள் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்துள்ளது. வலுவான இலக்கை எட்ட இன்னும் 250-க்கும் மேற்பட்ட ரன்கள் தேவைப்படுவதால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
வடோதரா மைதானத்தில் பந்துவீச்சுக்கு சாதகமான சூழல் நிலவுவதால், இந்த ஆட்டம் கடைசி வரை விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


