தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் - பாபர் அசாம்.. ஆனால் எதிர்பாராமல் ஏற்பட்ட துரதிஷ்டம்..!
பிக் பேஷ் லீக் வரலாற்றில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பாபர் அசாம் ஆகிய இரு ஜாம்பவான்களின் தொடக்க ஜோடி ஆட்டம், துரதிர்ஷ்டவசமாக மழையினால் கைவிடப்பட்டது.
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக இருவரும் முதன்முறையாக தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஸ்மித் 16 பந்துகளில் 19 ரன்களுடனும், பாபர் 14 பந்துகளில் 9 ரன்களுடனும் நிதானமாக விளையாடி, 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் சேர்த்தனர். ஆனால், விடாது பெய்த மழையினால் போட்டி கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன.
இந்த ஒரு புள்ளியின் மூலம் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 13 புள்ளிகளுடன் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆஷஸ் தொடர் முடிந்து ஸ்மித் போன்ற நட்சத்திரங்கள் ஜனவரி 10 முதல் பிபிஎல் தொடருக்குத் திரும்பிய நிலையில், இந்த அபூர்வ ஜோடியின் முழுமையான ஆட்டத்தை காண முடியாமல் போனது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


