விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தந்த தாணு.. விரைவில் தெறி ரீரிலீஸ்!

விஜய் நடிப்பில் வெளியான படம் தெறி. அட்லி இயக்கத்தில் உருவான இப்படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படம் இந்தியிலும் வருண் தவான் நடிப்பில் பேபி ஜான் என்ற பெயரில் கடந்த வருடம் ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் விரைவில் தமிழில் தெறி படம் ரீரிலீஸ் ஆக உள்ளதாக தயாரிப்பாளர் தாணு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார்.

விரைவில் திரையில்Thalapathy @actorvijay @Atlee_dir @gvprakash @Samanthaprabhu2 @iamAmyJackson #Theri pic.twitter.com/94h1hhI9fk

— Kalaippuli S Thanu (@theVcreations) January 10, 2026

ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படதிற்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டதால் அப்படம் குறித்தபடி ஜனவரி 9, நேற்று வெளியாகாதது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது. 

இந்நிலையில் தெறி ரீரிலீஸ் செய்தி ஆறுதலாக அமைந்துள்ளது. தெறி படம் பொங்கலை ஒட்டி ரீரிலீஸ் ஆனால் நன்றாக இருக்கும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.  

இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜன நாயகனுக்கு சென்சார் சான்றிதழ் வழக்கும் வழக்கு விசாரணை ஜனவரி 21 க்கு நேற்று தள்ளி வைக்கப்பட்டது. தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் இன்று உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.