ஜனநாயகனுக்கு சென்சார் கொடுங்க!.. நீதிமன்றம் தீர்ப்பு!.. இன்று ரிலீஸ் ஆகுமா?…
விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் இன்று படம் ரிலீஸ் ஆகவில்லை. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் படத்தில் ஆட்சேபம் உள்ள சில காட்சிகள் இருப்பதாகவும், மறுதணிக்கை செய்யவேண்டும் என்பதால் மேலும் அவகாசம் வேண்டும் என தணிக்கை வாரியம் தரப்பில் நீதிமன்றத்தில் சொல்லப்பட்டது.
தணிக்கை வாரியம் சொன்ன எல்லா மாற்றங்களையும் செய்த பின்னரும் வேண்டுமென்றே கால தாமதம் செய்கிறார்கள் என படக்குழு சார்பில் நீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்த போது இன்று விசாரணைக்கு இன்று தீர்ப்பு அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று தீர்ப்பை வாசித்த நீதிபதிகள் ஜனநாயகன் படத்திற்கு உடனே சென்சார் சான்றிதழ் கொடுக்கவேண்டும் என தீர்ப்பளித்தனர். மேலும், ஜனநாயகனை மறு தணிக்கைக்கு அனுப்பிய உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. அதோடு, ஏற்கனவே ஒப்புக்கொண்ட U/A சான்றிதழை கொடுக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
எனவே ரசிகர் எதிர்பார்த்தபடி இன்று திரைப்படம் வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது இந்த தீர்ப்பு விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது, அதேநேரம், படத்தை இன்றே வெளியிடுவதா இல்லை நாளையா என்பதை பட தயாரிப்பு நிறுவனமே முடிவு செய்யும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


