2026 டி20 உலக கோப்பை போட்டிக்கான ஜெர்சியை அறிமுகம் செய்தது நேபாளம் அணி

20 அணிகள் இடையிலான 10-வது ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி ஏ பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவுடன் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், சி பிரிவில் இடம்பெற்றுள்ள நேபாளம் அணி தனது டி20 உலக கோப்பை போட்டிக்கான ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.

நேபாளம் இடம்பெற்றுள்ள சி பிரிவில் , இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், இத்தாலி ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.