சர்வதேச டி20 லீக் தொடர்: சாம் கரண் தலைமையிலான அணி அபார வெற்றி..
சர்வதேச டி20 லீக் தொடரின் விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், சாம் கரன் தலைமையிலான டெசர்ட் வைப்பர்ஸ் அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
முதலில் பேட்டிங் செய்த டெசர்ட் வைப்பர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் என்ற சவாலான இலக்கை எட்டியது. அதிரடியான பேட்டிங் மற்றும் சிறப்பான பாட்னர்ஷிப் மூலம் அந்த அணி வலுவான நிலையை அடைந்தது.
183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய எம்ஐ எமிரேட்ஸ் அணி, டெசர்ட் வைப்பர்ஸ் அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 46 ரன்கள் வித்தியாசத்தில் டெசர்ட் வைப்பர்ஸ் அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் ஐஎல்டி20 தொடரின் மிகச்சிறந்த அணிகளில் ஒன்றாக தனது முத்திரையை டெசர்ட் வைப்பர்ஸ் பதித்துள்ளது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


