BB TAMIL 9 DAY 90: பம்மிய பாரு; பாரு - கம்ருதீன் வீழ்ச்சி தரும் பாடம்; 90வது நாளில் நடந்தது என்ன?

மெயின் டோர் திறக்கிறது. பாரு தன்னந்தனியாக அதை நோக்கி நடக்கிறார். யாரும் அவரைக் கட்டியணைத்து வழியனுப்ப வரவில்லை. யாரும் கண்ணீர் சிந்தவில்லை.

பிக் பாஸின் குரல் கேட்கவில்லை. பயண வீடியோ இல்லை. முறையான வழியனுப்புதல் இல்லை. ரெட் கார்டு வாங்கியவர்களுக்குச் சம்பளமும் கிடைக்காது என்கிறார்கள். 

யாராவது ஏதாவது சொல்வார்களா என்கிற தவிப்புடன் பாரு நிற்கிறார். ‘அது நடக்காது’ என்பது புரிந்தவுடன் திரும்பி கதவை நோக்கி துயரத்துடன் நடக்கிறார். பரிதாபம்.  ‘டைட்டில் வின்னர்’ என்று சொல்லப்பட்டவருக்கு என்ன ஒரு வீழ்ச்சி?!


முன்கோபமும் பழிவாங்கல் உணர்வும் வன்மமும் புறணியும் ஆபாச வசையும் அப்போதைக்கு போதைக்கான இன்பத்தைத் தரலாம். ஏன், சின்னச் சின்ன வெற்றிகளைக்கூட தரலாம். ஆனால் இறுதியில் ஒரே நொடியில் அதள பாதாளத்திற்கு நம்மை தள்ளி விடும் என்பதற்கான உதாரணம் பாருவும் கம்ருதீனும். 

BB TAMIL 9 DAY 90

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 90

வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

சபரி, வினோத், திவ்யா என்று பலரும் பாரு - கம்ருதீன் அட்ராசிட்டி பற்றி வெகுண்டு கத்துகிறார்கள். ஆனால் பாரு அலட்டிக் கொள்ளவில்லை. ‘என்ன பண்ணிட்டேன் இப்போ?’ என்று அலட்சியமாகப் பேசுகிறார். 

“நீங்க யாரும் கார்ல இருந்து இறங்காதீங்க.. இவங்க ஜெயிக்கக்கூடாது” என்று மற்றவர்களை நோக்கி சபரி கத்துகிறார். கடைசியில் அதுதான் நடந்தது. பாருவும் கம்ருதீனும் தூங்கி ஆட்டத்தை விட்டு வெளியேறுகிறார்களா? இதற்காகவா இத்தனை அலப்பறை?!

பொதுவாக தன் மீதான வசைகளுக்குக் கூட பொறுமையாக நிற்கும் விக்ரம், கோபத்தின் உச்சத்தில் கத்துகிறார். ‘வாடா.. ஒண்டிக்கு ஒண்டி சண்டை போடலாம்’ என்று மல்லுக்கு நிற்கிறார் கம்ருதீன். சான்ட்ரா செய்வது நடிப்பாகவே இருந்தாலும் ‘அவருக்கு ஒருவேளை உண்மையாக ஏதாவது ஆகியிருந்தால்?’ என்கிற வருத்தமோ குற்றவுணர்ச்சியோ இருவரிடமும் இல்லை. 

கார் டாஸ்க்கில் பாரு - கம்மு தொடர்ந்து செய்த அட்ராசிட்டி

சான்ட்ராவைத்தான் தனிப்பட்ட கோபத்தில் தள்ளி விட்டார்கள் என்று பார்த்தால் திவ்யாவின் தலை மீது கால் படுமாறு அட்ராசிட்டி செய்கிறார் பாரு. எனில் இவர்கள் மற்றவர்களை வெறுப்பேற்றி வெளியேறுவதைத் திட்டமிட்டு செய்கிறார்கள் என்று புரிகிறது.

“இவங்க தெரியாம பண்றாங்கன்னா நெனக்கற?” என்று சபரி சொல்வதும் இதைத்தான். “உங்க அம்மா சொல்லியே திருந்தலை.. நான் சொன்னாவா திருந்த போறே?” என்று பாருவைச் சரியாக கேள்வி கேட்கிறார் திவ்யா. 

சிகிச்சை முடிந்து சான்ட்ரா திரும்புகிறார். நடுக்கத்துடன் அவர் வீட்டிற்குள் வர, “வாங்க பயப்படாதீங்க.. எங்க அக்கா, தங்கச்சிக்கு இப்படி நடந்தா விட்டுறுவமா?” என்று அரவணைத்து செல்கிறார் சபரி. இத்தனை நாட்கள் போயிருந்த இமேஜை எல்லாம் இந்த ஒரே சம்பவத்தில் சபரி ஈடுகட்டி விடுவார் போலிருக்கிறது.

டாஸ்க் போனால் போகட்டும் என்று காரில் இருந்து இறங்கியது முதல் கம்ருதீனைத் துணிச்சலாக எதிர்த்தது வரை ஒரு ஹீரோவாக கண்ணுக்குத் தெரிகிறார். 

BB TAMIL 9 DAY 90
BB TAMIL 9 DAY 90

“வினோத் டாஸ்க் ஆட மாட்டார்ன்னு சொல்றாங்க. இந்த டாஸ்க்லதான் எனக்குச் சௌரியமா உட்கார இடம் கிடைச்சது. அதையும் கெடுத்தானுங்கடா” என்று வினோத் காமெடியாகச் சொல்ல சான்ட்ரா சிரிக்கிறார்.

எனில் அவர் நார்மலுக்கு வந்து விட்டார் என்பது புரிகிறது. “வாட்டர்மெலன் விட்ட சாபம்” என்று விக்ரம் சொல்ல, டிவியில் சீரியஸாகப் பார்த்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதியே புன்னகைத்து விடுகிறார். 

வெளுத்து வாங்கிய திவ்யா - பம்மி அமர்ந்திருந்த பாரு

அத்தனையும் செய்து விட்டு, “நாம யாரையாவது தரம் தாழ்த்தி பேசியிருக்கோமா?” என்று பாரு கம்ருதீனிடம் சொல்ல “பதிவு பண்றாங்களாமாம்” என்று சொல்லி விசே சிரிக்கிறார். உள்ளே வரும் கம்ருதீனைப் பார்த்து, பூச்சாண்டியைக் கண்ட குழந்தை மாதிரி சான்ட்ரா அலறி படுக்கையின் அடியில் ஒளிகிறார். ஹாரர் படத்தின் காட்சி மாதிரி இருக்கிறது. (சான்ட்ரா செய்வது கொஞ்சம் ஓவரோ?!)

கம்ருதின் சென்ற பிறகு காரில் தனியாக மாட்டிக் கொண்ட பாருவை திவ்யா வெளுத்து வாங்குகிறார். ஆனால் பாருவிடம் பலவீனமான எதிர்ப்பு மட்டுமே வருகிறது. கும்பலாக இருக்கும் போது குற்றம் செய்யும் துணிச்சல் தன்னால் வந்து விடுகிறது என்பதற்கான உதாரணம். 

அதுவரை அமைதியாக இருந்த சுபிக்ஷா மற்றும் அரோரா கூட கோபத்துடன் பாரு மீது பாய்கிறார்கள். கூட்டத்தில் யாராவது ஒருவர் துணிச்சலாக எழும் போது மற்றவர்களும் இணைகிறார்கள் என்பதற்கான உதாரணம். 

“ஏன் சான்ட்ராவைத் தள்ளி விட்டே.. இது ஸ்ட்ராட்டஜியா என்னது..?” என்று திவ்யா ஆவேசத்துடன் கேட்க “வீக்கெண்ட்ல பதில் சொல்லிக்கறேன்” என்கிறார் பார்வதி. அதாவது உனக்கு பதில் சொல்ல அவசியமில்லை என்று ஒரு பொருள்.

BB TAMIL 9 DAY 90
BB TAMIL 9 DAY 90

வார இறுதியில் வாய் சாமர்த்தியத்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்று இன்னொரு பொருள். தன் நெகட்டிவிட்டியால்தான் இத்தனை வாரம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற துணிச்சல் பார்வதிக்குள் வந்திருக்கலாம். 

பாரு தூங்கி தோல்வியைச் சந்திக்கும்போது பார்வையாளர்களின் மகிழ்ச்சியான கூக்குரல்கள் கேட்கின்றன. இறுதியில் அரோரா விட்டுத் தர சுபிக்ஷா கார் டாஸ்க்கில் வெற்றியடைகிறார். ‘சாதிச்சிட்டீங்க” என்று வி்க்ரமும் சபரியும் பாராட்டுகிறார்கள். இந்த டாஸ்க்கில் தோற்றாலும் அரோராதான் டிக்கெட்டைப் பெறுவார் என்பது மாதிரியான நிலைமை. 

சான்ட்ராவின் பயக்கூச்சல் - உண்மையா, நாடகமா?

மறுநாள் காலை. பாருவிற்குள் அச்சமும் குற்றவுணர்வும் எழுந்திருக்க வேண்டும். “இந்த வாரம் என்னைத் துரத்தினா ஏத்துக்கறேன்” என்று முனகுகிறார். வேக் அப் பாடலின் போது இறங்கி குத்தி ஆவேசமாக ஆடுகிறார்.

இதுதான் கடைசி ஆட்டம் என்பது அவருக்கே தெரிந்து விட்டதோ, என்னமோ. ‘உன் பொண்டாட்டி நான் இல்லடா’ என்று பாடல் ஒலிக்கும் போது வினோத்தை நோக்கி குறும்பாக கை காட்டுகிறார் அரோ. 

பாத்ரூமிலிருந்து வெளியே வருவதற்குக்கூட அச்சப்படுகிற சான்ட்ராவை, ‘நாங்க இருக்கோம்’ என்று ஆறுதல் படுத்தி அழைத்து வருகிறார் அரோ. எல்கேஜி குழந்தை போன்று நடுக்கத்துடன் வருகிறார் சான்ட்ரா. அது உண்மையான மனப்பதட்டமா அல்லது அனுதாப நோக்கிலான நடிப்பா என்பது அவருக்கே வெளிச்சம். 

“நான் ஒண்ணும் வில்லன் கிடையாது. சான்ட்ராதான் என்னை டிரிக்கர் பண்ணாங்க. காமருதீன்னு சொன்னாங்க” என்று இன்னமும் தன்னை நியாயப்படுத்துகிற கம்மு, அதற்காக விக்ரமை அடிக்கவும் துணிகிறார்.  “எனக்கு சண்டை போடத் தெரியாது. ஆனா அடிடா பார்க்கலாம்” என்று மல்லுக்கட்டுகிறார் விக்ரம். 

BB TAMIL 9 DAY 90
BB TAMIL 9 DAY 90

பாருவும் கம்முவும் சரண்டர் ஆகி விடும் மனநிலையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கம்மு சொன்ன விளக்கம் காமெடியாக இருந்தது. “நான் உதைக்கல. காலால புஷ் பண்ணேன்”... 

இவற்றையெல்லாம் டிவியில் பார்த்த விசே “என்னால முடியல.. ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு” என்று சிரித்தபடி நகர்கிறார். விசே உள்ளே வருவதற்கு முன்னால் ‘மதுரைக்குப் போகாதடி’ பாடலுக்கு பாருவும் கம்முவும் எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி நடனம் ஆடுகிறார்கள். சானல் காப்பாற்றி விடும் என்கிற நம்பிக்கை. ஆனால் பாருவை மதுரைக்கே அனுப்பி வைத்து விட்டார்கள். 

“நீங்க ஏன் தட்டிக் கேட்கலை?” - விக்டிமை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறாரா விசே?

விசே உள்ளே வந்தவுடன், மற்றவர்களிடம் நடந்த சம்பவத்தைப் பற்றி விசாரித்தார்.. “ஏன் பொறுத்துப் போனீங்க.. ஏன் எதிர்க்கலை.? என்று பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கும் வேலை மாதிரி ஒன்று செய்தார். பிறகு பாரு கம்முவை விசாரித்தார். அவர்கள் ஏதோ சப்பைக் கட்டு கட்ட “அதெல்லாம் செல்லாது”என்று இரண்டு ரெட் கார்டுகளை தூக்கிக் காட்டினார். பார்வையாளர்களின் உற்சாகக் கூச்சல். அறத்தை நிலைநாட்டிய தோரணையோடு விசே நிகழ்ச்சியை முடித்தார். பாருவும் கம்முவும் சான்ட்ராவிடம் மன்னிப்பு கேட்டார்கள். ஆனால் அது ஏற்கப்படவில்லை. 

BB TAMIL 9 DAY 90
BB TAMIL 9 DAY 90

இது தொடர்பாக சில விஷயங்களை விரிவாக பார்த்து விடுவோம். 

‘’பாரு, சான்ட்ராவை காரில் இருந்து தள்ளி விட்டது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஃபார்மட்டிற்குள்தான் வரும். வேறு ஷோக்களில் அவ்வாறு நடந்திருக்கிறது. எனவே இதில் தவறில்லை’...  என்று சமூகவலைத்தளங்களில் சிலர் நியாயம் கற்பிக்கிறார்கள். அது பாருவின் PR டீம் என்பதைத் தாண்டி, பாருவின் பக்தர்கள் சிலர் சொன்னதாகவே வைத்துக் கொள்வோம். 

எந்தவொரு பிஸிக்கல் டாஸ்க்கிலும் இவ்வாறான தள்ளுமுள்ளு நடப்பது வழக்கம்தான். ஆனால் அது முடிந்த பிறகு ‘ஸாரிடா மச்சான்’ என்று இரு தரப்பும் ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டால் பிரச்சினையில்லை. ஆனால் பாரு மற்றும் கம்ருதீனின் கார் டாஸ்க் செய்கைக்குப் பின்னால் நிறைய bullying இருந்தது. பழிவாங்கல் உணர்ச்சி இருந்தது. சான்ட்ராவை டிரிக்கர் செய்ய வேண்டும் என்கிற அஜெண்டா இருந்தது. 

கார் டாஸ்க்கில் மட்டுமல்ல, சக போட்டியாளர்களின் மீது பாருவும் கம்ருதினும் தொடர்ச்சியாக abuse செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். இவையெல்லாம் சேர்ந்துதான் ‘சான்ட்ரா தள்ளி விடப்பட்ட’ சம்பவத்தை பார்க்க வேண்டும். அந்த ஒட்டுமொத்த கோபமும் இணைந்துதான் ‘ரெட் கார்ட் தர வேண்டும்’ என்று பெரும்பாலான பார்வையாளர்களின் எதிர்பார்ப்பாக அமைந்தது. கூடவே சான்ட்ராவின் அனுதாபமும் இணைந்து கொண்டது.  இந்த ஆட்டத்தை பாருவும் கம்ருதீனும் ஸ்போர்ட்டிவ்வாக ஆடியிருந்தால் இத்தனை பெரிய எதிர்ப்பு வந்திருக்காது. “அவங்களா எமோஷனலி டிரையின் ஆகி போகட்டும்’ என்று திவ்யாவும் அரோவும் சொல்வதுதான் சரியானது. 

BB TAMIL 9 DAY 90
BB TAMIL 9 DAY 90

கம்முவின் எவிக்ஷனுக்கு பாரு மட்டும்தான் காரணமா?

பாரு மனச்சோர்விற்கு ஆளாகியிருக்கும் போதெல்லாம் சான்ட்ரா உடன் நின்றிருக்கிறார். அது சந்தர்ப்பவாத கூட்டணி என்றாலும் பரவாயில்லை. பாருவிற்கு அந்த நன்றியுணர்ச்சி சிறிது கூட இல்லை. மறுபடியும் கம்முவுடன் இணைந்த உற்சாகத்தில் நிறைய அவதூறுகளை வீசிக் கொண்டேயிருந்தார். இதுவும் பார்வையாளர்களின் கோபத்திற்கு ஒரு காரணமாக இருக்கும். 

அடுத்ததாக “பாரு கூட சேர்ந்துதான் கம்ருதீன் நாசமாகப் போனார். தனியாக விளையாடினால் உருப்பட்டிருப்பார். அவருடைய எவிக்ஷனுக்கு பாருதான் காரணம்.. இனிமே அவ கூட சேராத” என்பது சக போட்டியாளர்களின் வலுவான கருத்தாக இருந்தது. 

இப்படி எல்லா கேஸையும் பாரு மீது மட்டும் எழுதி விட்டு கம்ருதீனை ‘ஒண்ணும் தெரியாத பாப்பா’ மாதிரி சித்தரிக்கக்கூடாது. அவர் பாருவுடன் விலகியிருந்த போது சற்று மாறியிருந்தார் என்பது உண்மைதான்.

ஆனால் அந்தச் சமயத்திலும் பாருவிடம் மட்டுமல்லாது மற்றவர்களிடமும் கோபத்தைக் காட்டினார். கம்முவின் முன்கோபமும் பழிவாங்கல் உணர்வும் அவருடைய பெரிய வில்லன். அது இல்லாத சமயத்தில்தான் சாதாரண கம்முவைப் பார்க்க முடிகிறது. 

“அவளாலதான் நீ நாசமா போனே.. இல்லைன்னா ஒழுங்கா இருந்திருப்பே” என்று நட்புணர்ச்சியால் வினோத் இப்போது வருந்துவது நெகிழ்ச்சிதான். ஆனால் கம்ருதீன் தவறு செய்யும் போதெல்லாம் ‘நண்பன்’ என்கிற பெயரில் வந்து முட்டு கொடுக்கும் தவறை வினோத்தும் செய்திருக்கிறார். அதற்காக விசேவால் கண்டிக்கப்பட்டும் இருக்கிறார். 

BB TAMIL 9 DAY 90
BB TAMIL 9 DAY 90

பாரு + கம்மு = சந்தர்ப்பவாத கூட்டணி

இந்த ஷோவிற்காக பாரு, கம்முவைப் பயன்படுத்திக் கொண்டாரா என்றால் அதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆரம்பத்தில் கம்மு மீது பாருவிற்கு ஈர்ப்பு ஏதும் இல்லை. ஆனால் அரோராவுடன் நெருக்கமாக அவர் பழகத் துவங்கியுடன் இயல்பாக எழுந்த பொறாமை உணர்ச்சி காரணமாக ‘அந்தப் பொம்மை எனக்குத்தான் வேண்டும்’ என்று கைப்பற்ற பாரு பல்வேறு ‘நீலாம்பரித்தனமான’ குட்டிக் கரணங்களை அடித்தார். அதில் வெற்றியும் பெற்றார். ஆனால் அதுதான் பாருவை வீழ்ச்சிக்குக் கொண்டு சென்றது. 

பாருவிற்கும் கம்முவிற்கும் பரஸ்பரம் அவரவர்களின் கீழ்மைகள் பற்றி நன்றாகவே தெரியும். என்றாலும் ஷோ கன்டென்ட் காரணமாக சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துக் கொண்டார்கள். ஓரளவிற்கு அது காப்பாற்றியது. இறுதியில் கை விட்டு விட்டது. 

“பாரு கம்மு செஞ்சது ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்க ஏன் அதை எதிர்க்கலை. கேட்டது பத்தலை.” என்று மற்றவர்களைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுகிறார் விஜய் சேதுபதி. இந்தக் கேள்வியை முன்வைக்க விசேவிற்கோ அல்லது பிக் பாஸிற்கோ தார்மீகமான நியாயம் இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை.  

BB TAMIL 9 DAY 90
BB TAMIL 9 DAY 90

தவறு நடக்கும் போது மௌனமாக வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்

நீங்களே கவனித்திருக்கலாம். எந்தவொரு உக்கிரமான சண்டையிலும், அடிதடியிலும் பிக் பாஸின் குரல் கேட்கவே கேட்காது. மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார். ஏனெனில் இதுதான் அந்த நிகழ்ச்சியின் நோக்கம். பிறகு வார இறுதியில் விசே என்னும் பிம்பத்தின் வழியாக நியாயம் பேச ஆரம்பிப்பார்கī

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.