நாம் யாரை தண்டிக்கிறோம்?.. வங்கதேச வீரர் முஷ்தபிசுர் ரகுமான் நீக்கத்திற்கு சசி தரூர் கண்டனம்
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்காகக் கிரிக்கெட்டை பலிகடா ஆக்கக்கூடாது என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை காரணம் காட்டி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த வங்கதேச வீரர் முஷ்தபிசுர் ரகுமானை விடுவிக்குமாறு பிசிசிஐ உத்தரவிட்டது.
பிசிசிஐ-யின் கட்டளையை ஏற்று, 9.20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட முஷ்தபிசுர் ரகுமானை கேகேஆர் அணி விடுவிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதற்கு திருவனநாதபுர காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "பிசிசிஐ, முஷ்தபிசுர் ரகுமானை மிகவும் பரிதாபகரமான முறையில் அணியிலிருந்து நீக்கியுள்ளது.
ஒருவேளை வங்கதேசத்தின் இந்து வீரர்கள், லிட்டன் தாஸ் அல்லது சௌம்யா சர்க்கார் போன்றவர்கள் அணியில் இருந்திருந்தால் பிசிசிஐ என்ன செய்திருக்கும்?
ஒரு நாடு, ஒரு தனிமனிதன், அவரது மதம் - இங்கே நாம் யாரைத் தண்டிக்கிறோம்?
விளையாட்டில் புகுத்தப்படும் இந்த அர்த்தமற்ற அரசியல் நம்மை எங்கே கொண்டு செல்கிறது? ஒரு தனிப்பட்ட விளையாட்டு வீரரை அவரது நாட்டின் அரசியல் சூழ்நிலைக்குப் பொறுப்பாக்குவது முறையல்ல" என்று தெரிவித்துள்ளார்.
Recalling my views on the subject, now that @bcci has deplorably pulled the plug on @Mustafiz90. And what if the Bangladeshi player in question had been @LittonOfficial or @soumyasarkar_06? Who are we punishing here: a nation, an individual, his religion? Where will this mindless… https://t.co/KSftpw0YGa
— Shashi Tharoor (@ShashiTharoor) January 3, 2026
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


