காந்தி நினைவுநாளில் வெளியாகும் காந்தி டாக்ஸ்

மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் நடித்திருந்தனர். இதன்பின்னர் இந்த மூவர்கள் கூட்டணி இணைந்து படம் தான் காந்தி டாக்ஸ். வசனங்கள் எதுவுமின்றி மெளனப் படமாக உருவாகியுள்ள காந்தி டாக்ஸ், டார்க் காமெடி ஜானரில் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

கிஷோர் பி பெல்லேக்கர் இயக்கியுள்ள காந்தி டாக்ஸ் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

 

இந்த நிலையில், காந்தி டாக்ஸ் படம் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, காந்தி டாக்ஸ் படம் காந்தி நினைவுதினமான வருகிற 30-ந்தேதி உலகளவில் வெளியாக உள்ளது. 



மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.