மண்ணச்சநல்லூர் ஸ்ரீ பகவதி அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளில் தனலட்சுமி அலங்காரம்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற ஸ்ரீ பகவதி அம்மன் திருக்கோயிலில், 125-வது ஆண்டு திருவிழா தற்போது கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மண்ணச்சநல்லூர் வணிக வைசியர் சங்கம் சார்பில் நடத்தப்படும் இந்த வரலாற்று சிறப்புமிக்க விழாவின் எட்டாம் நாள் நிகழ்வு, பக்தர்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக, அம்மனுக்கு ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களால் பிரத்யேகமாக செய்யப்பட்ட "தனலட்சுமி அலங்காரம்" நடைபெற்றது.
இந்த தனித்துவமான அலங்காரத்திற்காக 1 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலான புதிய நோட்டுகள் மற்றும் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன. அதனை தொடர்ந்து, சிறப்பு பொங்கல் படையலிடப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
வரும் நாட்களில் அம்மனின் பல்வேறு வீதி உலாக்களும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
Edited by Mahendran
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

