இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்க மறுப்பு: ஆஸ்திரேலிய வீரர் கூறிய காரணம்..!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது கௌதம் கம்பீர் செயல்பட்டு வரும் நிலையில், அணியின் டெஸ்ட் பயிற்சியாளராக பணியாற்றும் வாய்ப்பை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்து வருவது கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதில் தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

 

தற்போது இந்திய அணி சொந்த மண்ணில் சந்தித்துள்ள சவாலான சூழல்களை சுட்டிக்காட்டிய கில்லெஸ்பி, டெஸ்ட் போட்டிகளில் அணியின் செயல்பாடுகள் மேம்பட வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார். எனினும், கௌதம் கம்பீர் பொறுப்பேற்ற மிக குறுகிய காலத்திலேயே இந்திய அணியின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். கம்பீரின் தலைமையின் கீழ் அணி ஒரு வலுவான கட்டமைப்பை நோக்கிச் செல்வதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

எனினும், பிசிசிஐ அடுத்தகட்டமாக யாரை தொடர்பு கொள்ளும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கம்பீருடன் இணைந்து பணியாற்ற ஒரு சிறப்பு டெஸ்ட் பயிற்சியாளர் நியமிக்கப்படுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Edited by Mahendran

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.