டிமான்ட்டி காலனி 3 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியீடு
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி 2015-ம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2-ம் பாகத்தை படக்குழு வெளியிட்டது. இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. உலகளவில் இப்படம் 80 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழு மூன்றாம் பாகத்தை இயக்க திட்டமிட்டது. படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து முடிந்த நிலையில் படப்பிடிப்பை ஜூலை மாதம் படக்குழு பூஜை விழாவுடன் தொடங்கியது. இந்த பாகத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு நேற்று வெளியிட்டது. அதில் கதாநாயகன் அருள்நிதி ஒரு நாற்காளியில் வில்லன் சிரிப்பில் உட்கார்ந்து கொண்டாருக்கிறார். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்நிலையில் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று மாலை 5.31 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


